பாலியல் உரிமை
"நாம் எப்படி வாழ்வது? -
என்னிடம் ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார்.
நான் அதே கேள்வியைக் கேட்க நினைத்த
அதே நபர்.
எப்பொழுதும்போல, மேற்கண்டதுபோல,
அசட்டுத்தனமான கேள்விகளே
மிக அவசரமான கேள்விகளாக இருக்கின்றன."
விஸ்வாவா சிம்போர்ஸ்கா
போலிஷ் மொழிக் கவிஞர்
"எவருடைய வாழ்க்கை வாழ்க்கையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது? வாழ்வதற்கான உரிமை எவரெவருக்கு உண்டு? வாழ்க்கை எங்குத் தொடங்கி எங்கு முடிகின்றது என்பதை எப்படித் தீர்மானிக்கின்றோம்? பின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைக்கு எதிரான விதத்தில் எப்படிச் சிந்திக்கின்றோம்?" ஜூடித் பட்லர், "Undoing Gender"
இன்று நான் முன்வைக்கவிருக்கும் ஒரு சில கருத்துகள் வாழ்க்கை பற்றிய இந்த இரு கேள்விகளுக