நினைவுகூரப்பட வேண்டிய நெருக்கடிகள்
1975இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலைப் பிரகடனம் குறித்த நினைவுகூரல்களோடு நாம் இந்தக் கூட்டத்தைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம் என்னும் கருத்துருவம் சார்ந்து சிவில் சமூகம் கொண்டிருந்த கற்பனைகளை முற்றாக அழித்த நிகழ்வு அது. 1951இல் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தை வெற்றுத்தாளாக மாற்றியிருந்தது அதிகார வெறி கொண்ட இரும்புக்கரமொன்றின் கையொப்பம். ஜனநாயக அமைப்பின் தூண்கள் ஒரு நள்ளிரவில் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரு நள்ளிரவுக் கனவை மற்றொரு நள்ளிரவு கொடுங்கனவாக மாற்றியிருந்தது. தேசத்தின் விடுதலைக்குத் தம்மை அர்ப்பணித்ததாகக் கூறிக் கொண்ட ஒரு குடும்பத்தின் அடுத்து வந்த தலைமுறை தன் தியாகத்திற்கு ஜனநாயகத்தையே விலையாகக் கேட்டது. நீதிமன்றங்கள், சட்ட மன்றங்கள், ஊடகங்கள் முதலான ஜனநாயகத