படைப்பாளிகளும் சாதியும்: சில கேள்விகள்
சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் உயிரோட்டமான தலைமையாயிருந்த பெரியார், வன்னிய குல ஷத்திரியர், தேவேந்திர குல வேளாளர், நாடார் இனமக்கள் போன்றோர் நடத்திய மாநாடுகளில் பங்கேற்றார். இம்மாநாடுகளில் உரையாற்றுகிறபோது, தாழ்வின் பள்ளத்தில் நிற்கிற அவர்கள் தங்கள் பெயர்களை மட்டும் சிகரத்தில் கொண்டு எதை அடைய முயல்கிறார்கள் என விமர்சித்தார்.
பெரியார் வழியில் திமுகவின் தொடக்க காலத்தில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலைமை தாங்கின.
60களில் முழுமையாகத் தேர்தல் நீரோட்டத்தில் கலப்பது எனத் திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்தபின், முன்னர் அவர்கள் கைக்கொண்ட பெரியார் கொள்கைகளின் உறுதிப்பாட்டைக் கை நழுவவிடலாயினர். திராவிட தேசியம் இந்திய தேசியமானது. கடவுள் இல்லை என்ற முழக்க