சிறப்புப்பகுதி
தன் இதழியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் காலச்சுவடு பல்வேறு சந்திப்புகளையும்
கூட்டங்களையும் நடத்திவருவதையும் இக்கூட்டங்களில் கலை இலக்கியம் சார்ந்து
மட்டுமல்லாமல் சமூக வாழ்வின் அக்கறைக்குரிய பல்வேறு கூறுகள் சார்ந்தும் விரிவான
விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுவருவதையும் வாசகர்கள் அறிவர். ஒரு தீவிர இதழ் ஆற்ற
வேண்டிய சமூகக் கடமைகளில் ஒன்றாகவே காலச்சுவடு இத்தகைய கூட்டங்களையும்
சந்திப்புகளையும் கருதிச் செயல்பட்டுவருகிறது. கடந்த 14.06.2008 அன்று சென்னை புக்
பாயிண்ட் அரங்கில் காலச்சுவடு நடத்திய 'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்னும்
தலைப்பிலான கருத்தரங்கும் அந்த வகையில் முக்கியமானது.
ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் தொடர்ந்து சோதனைகளுக்குள்ளாகிவரும் கருத்துரிமை, வாழ்வுரிமை சார்ந்த பிரச்சினைகளில் அக்கறையோடு இயங்கிவரும் படைப்பில