2003 ஆம் ஆண்டில் தமிழகப் பொது நூலகத் துறை 'காலச்சுவடு' இதழ்களை நூலகங்களில் வாங்க அனுமதியளித்தது. ஒரு சில மாவட்டங்களில் மொத்தமாகச் சில நூறு பிரதிகள் வாங்கப்பட்டுவந்தன. ஓரளவு விழிப்புணர்வுடன் இருந்த மாவட்ட நூலகர்களுக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். 2006ஆம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்து மாற்று இதழ்கள், பதிப்பகங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நூலகத் துறையைச் சீரமைப்பது, மேம்படுத்துவது, சிங்கப்பூர் மையநூலகம்போல எல்லாத் தமிழ் நூல்களும் மற்றும் பற்பல வசதிகளும் அமைந்த ஒரு நூலக மையம் சென்னையில் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களை விவாதித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 2006 ஆகஸ்ட் மாதம் முதல் 'காலச்சுவடு' நூலகங்களில் 1500 பிரதிகள் வாங்கப்பட்டது. அதற்காகத் தங்கம் தென்னரசு அவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
காமராசர் ஆட்சிக் காலத்திற்குப் பிறகு தமிழகத்திற்கு அமைந்திருக்கும் சிறந்த கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு. இடைப்பட்ட காலத்தில் பள்ளிக் கல்வி இந்தியாவிலேயே மட்டமான தரத்திற்குச் சீரழிந்த