கருத்துச் சுதந்திரமும் கலைஞனின் சுதந்திரமும்: ஆறுதல் அளிக்கும் இரண்டு தீர்ப்புகள்
இரண்டு மாத இடைவெளியில், மே 8, ஜூலை 1 ஆகிய தேதிகளில் உண்மையான ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் மனித சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் இப்போதும் விடாப்பிடியாக நம்பிக்கைகொண்டிருக்கும் சொற்ப நபர்களுக்குப் பெரும் நம்பிக்கையும் ஆறுதலும் ஊட்டும்விதமாக இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. மிகை தேசிய வெறி, ஒரே கலாச்சார, ஒரே மத அரசியல் சக்திகள் தற்போது ஊக்கம் பெற்று நாட்டின் சகலத் துறைகளிலும் ஆக்கிரமித்துவரும் சூழலிலும்கூடச் சில நீதிமன்றங்களும் சில நீதிபதிகளும் நிதானமும் அறிவமைதியும் கொண்டு நடுநிலைமையிலான தீர்ப்புகள் தருவது நம்மிடம் மிச்சமிருக்கும் அதிர்ஷ்டங்களில் ஒன்று.
1
புகழ்பெற்ற அரசியல் மனோதத்துவ விமரிசகர் அஷிஸ் நந்தியின்மீது "மதவெறியை"த் தூண்டும் விதமாக எழுதியதற்காகக் குஜராத்