மேலும் ஒரு சாளரம்
சிற்றிதழ்களுக்கு இன்றுள்ளதுபோலப் பரவலான கவனம் இல்லாத நேரங்களில், இதழ் தபாலில் வரும் நாளுக்காக, அவற்றின் தோற்றம் மற்றும் உள்ளடகத்தின் வகை மாதிரிகளை மனத்தில் கற்பனைசெய்தபடி காத்திருந்தது ஒரு காலம். பிறகு, காலம் உருமாறி வழவழப்பான முன்னட்டைகளோடு கடைகளில் தொங்கும் அளவிற்கு இவ்விதழ்கள் மெல்ல, ஆனால், பலமான வாசக கவனம் பெறத் துவங்கின. இந்த வளர்ச்சியினூடாகவே இன்று பத்துக்கும் குறைவில்லாத சிற்றிதழ்கள் (மாதந்தோறும்) வெளிவருகின்றன. ஆத்மார்த்தமான உழைப்பைக் கொட்டும் ஆசிரியர் குழுக்களால் இவை இதழுருப் பெறுகின்றன. முன்னர் எழுத்தாளனுக்கிருந்த பிரசுரம் சார்ந்த தயக்கங்கள், தடைகள் அனைத்தும் இன்று ஒன்றுமேயில்லால் ஆகிவிட்டன. இச்சூழலில் விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த