சில விலங்குகள் மேலும் சமமானவை
ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது. அந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படும். ஒருவருடைய உயிரைத் தன்னிச்சையாகப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது.
- சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம்,
பிரிவு 6.1
எந்த மனிதனுடைய உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் சட்டத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு யாரும் எடுத்துவிட முடியாது.
- இந்திய அரசியல் சட்டம்,
பிரிவு 21
வாழ்வுரிமை அருகிவரும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே சிலர் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் எந்த உரிமையும் கோராமல் காவல் துறையினரின் விருப்புவெறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் துப்பாக்கிகளுக்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள்.
கொல்லப்படுபவர்கள்மீது பல வழக்க