கருத்துச் சுதந்திரத்தின் குத்தகை
ஒரு சராசரிக் குடிமகனைப் பொறுத்தவரை, சாதாரணகதியில் கருத்துச் சுதந்திரம் ஒரு கேள்விக்குறியாவதில்லை. அப்படியொன்று இருக்கிறதா என்றுகூட அவன் வியப்படையலாம். ஏனெனில், உலகிலுள்ள சாதாரண விஷயங்கள் பற்றிக் கருத்துச் சொல்ல அவனுக்குப் பிரத்தியேகமான சுதந்திரத்தை எழுதி வைக்க வேண்டியதில்லை. அது இப்போதும் அங்கே இருக்கிறது. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்துவதில்லை. ஆனால், அவன் தலித்தாகவோ பிற்படுத்தப்பட்டவனாகவோ இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உயர்சாதியினருக்குச் செல்வாக்குள்ள ஒரு பஞ்சாயத்துக் கூட்டத்தில் அவன் கருத்துச் சொல்கிறான் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவனுடைய கருத்தின்மீது இரும்பு உலக்கை விழுவதைப் பார்க்கலாம். அவனை வாயை மூடும்படி சிலர் சொல்லலாம். சிலர் சாடியெழுந்து அவனை அச்சுறுத்தலாம்; துன்புறுத்தலாம். கேர