"இந்துக் கலாச்சாரத்தில் நிர்வாணம் என்பது தூய்மையின் உருவகம்"
ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்?
இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கடுமையான அறிக்கைகளை நாடி, கிட்டத் தட்ட நம்பி - ஊடகங்கள் என்னிடம் வருகின்றன. ஆனால், உண்மையில் இந்தியாவைப் பற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தப் போக்கைக் காலத்தின் ஒரு சிறிய கணமாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு சிறிய தடங்கல் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய வேலைகள் 5000 ஆண்டுகளாக வலுவான ஒரு விசையுடன் நடந்துவருகின்றன. இளைய தலைமுறை அடிப் படைவாதத்தை, பழமைவாதத்தை வெறுத்து ஒதுக்கி, இந்த நிலையை