ஓர் அறிக்கை, ஒரு கூட்டம், ஒரு விவாதம்
காலச்சுவடு சார்பாக மே 8ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு சென்னை, தியாகராய நகர்,
வெங்கட் நாராயணா சாலையில் உள்ள செ. நெ. தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி அரங்கில்
இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பான ஐ. நா. அறிக்கை பற்றிய விவாதக் கூட்டம் ஒன்றுக்கு
ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈழத் தமிழர் நலனில் ஈடுபாடுகொண்ட, நீண்டகாலமாக அந்தத்
தளத்தில் செயல்பட்டு வரும் தமிழ் அறிவுலக ஆளுமைகளில் சிலர் அவ்விவாத அரங்கில்
பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பங்கேற்குமாறு வாசகர்களுக்கு அழைப்பிதழ்கள்
அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக்
கொள்ளும் சிலரது எதிர்ப்பு காரணமாகக் கூட்டத்தை நடத்தவியலாத சூழல் ஏற்பட்டது.
கூட்டத்தை ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது குறித்துக் காலச்சுவடு சார்பாகப்
பொறுப்பாசிரியர் தேவிபாரதியால் ஓர் அறிவி