உடல்மொழியும் அழகியல்தான்
சென்னை, கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட அற்றைத் திங்கள் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் நடக்கத் தொடங்கியுள்ளது. “அற்றைத் திங்கள் - சாதனையாளர்களைச் சந்தியுங்கள” என்ற இந் நிகழ்ச்சியை இதுவரை நடத்திவந்த காலச்சுவடு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகிய அமைப்புகளோடு மதுரையில் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து கொண்டது. அதன்படி மதுரையின் முதல் அற்றைத் திங்கள் 17.04.2011ஆம் நாள் மாலை மருத்துவக் கல்லூரி அரங்கில் நடந்தது. இம்முதல் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் நாசர் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்புரையைக் கண்ணனும் நாசர் குறித்த அறிமுகத்தை நாடக இயக்குநர் - நடிகர் சண்முகராஜாவும் வழங்கினர். பேசுவதற்குப் பார்வையாளர்கள் முன்வந்து நின்ற நாசர் சிறிய மௌனத்திற்குப் பின் பார்வையாளர்களை உற்றுநோக்கினார். அதில் நடிகனுக்கான தொனி இருந்தது. மைக்கைத் தவிர்த்துவிட்டுப் பார்வையாளர்களோடு நேரடியாகப் பேசத் தொடங்கிய நாசர் தான் நடிகராக வந்ததற்கான காரணத்தையும் குடும்பச் சூழலையும் செங்கல்பட்டில் வாழ்ந்த பால்ய நினைவுகளையும் அங்கிருந்த