அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அதைப் பற்றிய அனைத்து
சாத்தியமான சதிக் கோட்பாடுகளும் (Conspiracy theories), பின் லேடன் கொல்லப்படவில்லை
என்பது உட்பட, சொல்லப்பட்டுவிட்டன. பின் லேடனே தன்னைப் பற்றி அமெரிக்கப்
படைகளுக்குக் காட்டிக் கொடுத்துத் தன் கொலையை விரும்பி ஏற்றுக்கொண்டார் என்பது
மட்டுமே சொல்லப்படவில்லை. மிகப் பெரும் நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப் பெரும்
சதிகள் இருந்தாக வேண்டுமென நம்புகிறவர்கள் சதிக் கோட்பாட்டாளர்கள். ஜான் எப்
கென்னடியின் கொலை, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றது, 9/11 தாக்குதல் என எல்லா
நிகழ்வுகளைப் பற்றியும் இத்தகைய எண்ணற்ற சதிக் கோட்பாடுகளைக் காணலாம். அதிலும் பின்
லேடன் கொலை குறித்து அமெரிக்கா முதலில் கூறியதற்கும் ஒரு நாள் கழித்துக்
கூறியதற்கும் இடையிலிருந்த முரண்பாடுகள் சதிக் கோட்பாட்ட