கஸ்தூரிரங்கன் (1933-2011) - நீண்ட பயணத்தின் முடிவு
கஸ்தூரி ரங்கன் பணி நிமித்தமாகக் காசி சென்றபோது அவருடைய உடல்நிலை சரியில்லை என்ற முதல் அறிகுறி தெரிந்தது. நியூயார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இருந்தபோது ஏராளமான கட்டுரைகளில் அவருடைய பங்கிருந்தது. உலக அளவில் அப்பத்திரிகை பெருமதிப்பு பெற்றிருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை விதிவிலக்குகள்தாம் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஹிப்பிகள், சன்னியாசிகள், வேதபாட சாலை, குடுமி, நாமம் முதலியன இதில் அடங்கும்.
ஆனால் கஸ்தூரிரங்கன் 1960-70களில் பல அரசியல் கட்டுரைகள் சுதேசமித்திரனில் எழுதினார். தில்லியிலிருந்து சென்னை வந்தபிறகு தினமணி கதிர், தினமணி பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார்.
கஸ்தூரிரங்கன், சி.சு. செல்லப்பா வெளியிட்ட எழுத்து பத்திரிகையில் கவிதைகள் எழுதியிருக்கிறார். செல்லப்பா தொகுத்த புதுக் குரல்களில் அவரத