ஒசாமா பின் லாடன் என்னும் பயனுள்ள பகைவர்
நான் தந்திருக்கும் அடுத்த வசனத்தை முதலில் தயவு செய்து படியுங்கள்: ‘உலகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதுதான் எங்கள் கடமை’ இந்த வாக்கியம் சொல்லப்பட்ட சூழ்நிலையைச் சற்றுத் தவிர்த்து இச்சொற்றொடரை வாசிக்கும்போது தீங்கற்ற, எல்லாராலும் பேணக்கூடிய, அரவணைக்கக்கூடிய, செயல்படுத்தக் கூடிய சீரிய குறிக்கோளாகத் தென்படுகிறது. இந்த வசனத்தின் சொந்தக்காரர் ஒசாமா பின் லாடன். இந்தத் தகவலுடன் இவர் விளைவித்த அக்கிரமங்களையும் சேதங்களையும் நினைவில் வைத்துப் பார்க்கும்போது அப்பாவித்தனமாகக் காணப்பட்ட வார்த்தைகள் ஒரு புதுப் பரிமாணம் எடுத்து அச்சத்தையும் கவலையையும் தருகிறது.
பாகிஸ்தானில் பின் லாடன் எவ்வளவு ஆண்டுகள் தங்கியிருந்தார், அவர் மறைந்திருந்தது பாகிஸ்தான் அரசுக்கும் உளவுத் துறைக்கும் தெரிந்திருந்ததா என்று பாகிஸ்தானைத் தூஷிக்