தீவிர இலக்கியமே வாழும்
காலச்சுவடு, கடவு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்தும் அற்றைத் திங்கள் சாதனையாளர்களைச் சந்தியுங்கள் மே மாத நிகழ்வு மதுரையில் மருத்துவக் கல்லூரி அரங்கில் 15.05.2011ஆம் நாள் மாலையில் நடந்தது. இம்மாத நிகழ்வின் அழைப்பாளராக எழுத்தாளர் பெருமாள் முருகன் கலந்துகொண்டார்.
தான் பிறந்து வளர்ந்த கொங்கு வட்டாரத்தைப் பற்றியும் அப்பகுதி மக்களின் வாழ்க்கைமுறை பற்றியும் பேசத் தொடங்கிய பெருமாள்முருகன் அப்பகுதியின் சாதியக் கட்டுமானம் பற்றியும் விவரித்தார். குறிப்பாக அருந்ததிய நண்பர்களுடன் விளையாடி விட்டுச் செல்லும் சிறுவர்களைப் பெற்றோர்கள் குளித்த பிறகே வீட்டிற்குள் அனுமதிப்பர் போன்ற விசயங்களை ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்துகொண்டார்.
குமுதம், ராணி காமிக்ஸ் போன்ற பத்திரிகைகள் மூலமாகப் பள்ளி வயதிலேயே வாசிப்புப் பழக்கம் உருவானது. திருச்சி வானொலியில்