புதைகுழிக்கு அனுப்பப்படும் அறக்கோட்பாடுகள்
ஐ. நா. அமைத்த நிபுணர் குழு அறிக்கை இரு சாதிப்புகளைச் செய்துள்ளது.
1. “இது சர்வதேச நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்களின் சபை” என்று பெர்னார்ட் ஷா ஒருமுறை குறிப்பிட்டார். ஆதிக்க நாடுகள் சேர்ந்து தங்களுக்காக உருவாக்கிவைத்துள்ள ஐ. நா போன்ற அவைகள் அறநெறி சார்ந்து இயங்குபவை அல்ல; ஐ. நா தனது கடந்தகாலச் செயல்பாடுகளை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது.
2. எதுவும் நடக்கவில்லை இலங்கையில் என்று பாடிய இந்தியர்களையும் அவசர அவசரமாய் ஓடி அரக்கப் பறக்க நாலு இடங்களைப் பார்த்துவிட்டு “என்ன நடக்குது இலங்கையில்” என்றெல்லாம் எழுதித் தீர்த்த “பக்கவாத” எழுத்தாளர்களையும் மௌனமாக்கியிருக்கிறது. (அதனால் உலகமெலாம் குரல் கொடுக்கிறபோது இவர்கள் மௌனித்துவிட்டார்கள் போல.)
ஈழத் தமிழருக்கு இழைக்கப்பட்ட சித்திரவதைகள், துன்புறுத்தல்கள், படு கொலைகள் போன்றவை பற்றிப் பேசாமல் 21ஆம் நூற்றாண்டின் வரலாற்றைக் கடந்துவிட முடியாது. இவை பற்றிய அக்கறைகொள்ளாமல் சனநாயகம் பற்றிப் பேசுவதிலும் அர்த்தம் இருக்க முடியாது. ஈழத