“ஒரு துளி - புழுதி - தூசி நான்
எனினும்
உதைத்து எழுந்து உதயந்தேடும்
ஒரு ஜீவப்பறவை.”
என எழுபதுகளின் இறுதிப்பகுதியில் ‘மூன்றாம் அரங்கம்’ எனும் புதியவகை அரங்கத்தின் வாயிலாக இந்திய நாடக உலகில் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் பாதல் சர்க்கார். நடிகர் - பார்வையாளர் உறவுகள், நிகழ்த்து முறை, அரங்க வெளி, நிகழ்வை முன்னிறுத்தும் சித்தாந்தம் என மரபான படச்சட்டக அரங்கின் அனைத்துக் கூறுகளையும் விசாரணைக்குட் படுத்தியவர்.
இந்திய அளவில் நாடகத் துறைகள், கல்விப்புலங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மூன்றாம் அரங்கம். இன்று மிக முக்கிய ஆளுமைகளாக நாடக உலகில் பணியாற்றும் பலரும் பாதல் சர்க்காரின் நேரடி மாணவர்கள் அல்லது மூன்றாம் அரங்கால் உந்தப் பெற