மனசாட்சி, சட்டம், இறை நம்பிக்கை
பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம்
பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. ‘வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது’ என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் நிரந்தரமான இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வன்முறையை அவர் வழக்கமான ஒன்றென normalize செய்திருக்கக் கூடிய நிலையையும் அது காண்பிக்கிறது.
சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஒரு வருடமாகப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீதான தங்களுடைய வன்முறையைக் காவல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். காவல் துறையினருக்குரிய சீருடை அணிந்திராத, மஃப