பைத்தியம்
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது பால்ய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரரும் பஞ்சாயத்து உறுப்பினருமான நீங்கள், நான் குடியிருக்கும் இந்தக் குவார்ட்டர்ஸுக்கு வந்தீர்கள். அப்போது இங்கு நடந்ததை மறந்திருக்க முடியாது.
இருந்தாலும் நான் அதை இன்னொரு தடவை சொல்லிவிடுகிறேன். ஒரு சம்பவத்தைக் குறைந்தது இரண்டு நபர்களாவது தங்கள் கண்களாலோ கண்ணாடிகளாலோ பார்த்தால்தான் அதன் பொருளின் தும்பாவது கிடைக்கும். அதனால் இப்போது என்னுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் காதுகொடுத்தே ஆக வேண்டும்.
நீங்களும் உங்கள் கூட்டமும் அன்று காலையில்தான் இங்கே வந்து கதவைத் தட்டினீர்கள். நான் கதவைத் திறந்தேன்.
நீங்களும் உங்கள் கிங்கரர்களும் தண்ணீரைத் திறந்துவிட்டதுபோலப் பேசினீர்கள். நான் கொஞ்சம் பதறித்தான் போனேன். பதற்றம் மட்டுப்பட்டதும் உங்களுடைய வார்த்தைக