கௌரவக் கொலைகளும் அரசின் கௌரவமும்
சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நான்கு வருடங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் தாயாரையும் தந்தைவழிப் பாட்டியையும் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. 17 வயது திருச்செல்வி குடும்ப எதிர்ப்பை மீறிக் காதலருடன் சென்றதால் கொல்லப்பட்டிருக்கிறார். திருமணத்தை நடத்திவைப்பதாகப் பெற்றோர் தந்த உறுதியின் அடிப்படையில் வீடு திரும்பிய திருச்செல்வியை அவருடைய பாட்டி இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, அம்மா விஷம் புகட்டியிருக்கிறார். இதில் திருப்தி அடையாமல் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொலைசெய்திருக்கிறார்கள். பெரியம்மை தாக்கி மகள் இறந்துவிட்டதாகச் சொல்லி அவசர அவசரமாகப் புதைத்துவிட்டார்கள். சுமார் நான்கு வருடங்கள் கழித்துத் திருச்செல்வியின் சடலத்தில் நடந்த மருத்துவப் பரிசோதனைகளின் அடிப்படையில் அவருடைய தாயையும் பாட்டியையும் காவல் துறை விசாரித்த பிறகே உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த டிசம்பரில் கும்மிடிப்பூண்டிப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் கொலைக்காக அவருடைய தாயார் கைதுசெய்யப்பட்டார். அந்த மாணவி சகமாணவர்களுடன் ஆபாசம