தோழமை என்றொரு சொல்
சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்:
முள்ளிவாய்க்கால் நினைவுகள்
ஒருங்கிணைப்பும் தொகுப்பும் கவிஞர் சேரன்
"எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள்.
புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள்,
தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள்.
வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற
காற்றில்
கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும்.
கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின்
மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள்.
இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .”
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை வரிகள் மகேஷ் முனசிங்ஹ எனும் சிங்களக் கவிஞருடையவை. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். அறச் சீற்றம் பொங்கும் குரலில் தமது கவிதைகளையும் பிற