இன்னொரு மாலை
கடந்த ஜனவரி, 2012 மாத அற்றைத் திங்கள் நிகழ்ச்சியில் சல்மா கலந்துகொண்டார். அவர் கவிஞர், எழுத்தாளுமைச் செயல்பாட்டாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லாவிட்டாலும், சாதனையாளராக அம்மேடையேறும் அளவுக்கு முதிர்ந்த அனுபவம் பெற்றவரல்ல என்னும் எண்ணம் பார்வையாளர்கள் அனேகரின் முகங்களிலும் தென்பட்டது.
சாதனையாளர் என்னும் நிலையில் அக்கூட்டத்தின் முன்னால் தான் நிற்கவில்லை என்றும் ஒரு பெண் அதோடு எழுத்தாளர் என்னும் வகையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவே வந்திருந்ததாகவும் சொல்லித் தன் உரையைத் தொடங்கினார். தான் எழுதிக் கடந்த தூரத்தையோ எட்டிப்பிடித்த உயரத்தையோ மிகையாக்கித் தூவாமல், தான் தொடங்கிய சிறு புள்ளியிலிருந்து தன்னைச் செலுத்திக்கொண்டிருக்கும் எழுத்தைத் தள்ளி நின்று எடுத்துரைக்கும் கிராமத்துப் பெண்ணாகப் பேசிய சல்மாவின் மனத்திலிருந்து