கட்டுரை: நம்பிக்கை தரும் மானுடக் கரிசனை
போருக்குப் பிற்பாடு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் என்ன நடக்கிறதென ஜேர்மன் சஞ்சிகையொன்று அண்மையில் என்னைக் கேட்டிருந்தது. டிசம்பர் 2009க்குப் பிற்பாடு என்னால் இலங்கைக்குச் செல்ல முடியவில்லை. எனினும் என்னுடைய நூலான The Cageஇன் இறுதி அத்தியாயம், போருக்குப் பின் தமிழர்களுக்கு என்ன நடக்கலாம் என்பதைப் பற்றிப் பேசுகிறது எனச் சஞ்சிகை ஆசிரியருக்குத் தெரிவித்தேன்.
என்னென்னவெல்லாம் நிகழக்கூடும் என்று ஊகித்திருந்தேனே அவ்வளவும் அந்த மக்களுக்கு நிகழ்கிறது என்பதை அன்றாடம் நாளிதழ்கள், இணையதளங்கள் வழியாகப் பரவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன: தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக ராணுவமயமாக்கம் நடை பெற்றுவருகிறது; தமிழ் மக்களுடைய நிலங்கள், அவை தொடர்பான உரிமைகள் சிக்கல்களுக்குள்ளாகிவிட்டன; பெரும்பான்மையான மக்கள் குடியேற்றப