மட்டாஞ்சேரி ஸ்ரீதரன் மேனன்
வெற்றிச்செல்வி அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள். மருத்துவக் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் அவள் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகின்றன. வேலை எனப் பெரிதாக ஒன்றும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்தால்தான் அனைத்து நிறுவனங்களும் கட்டுக்கோப்புடன் நடக்கும் என்று நினைப்பதால் தினமும் அலுவலகத்திற்குச் செல்கிறாள். கணவர் கோயிலுக்குச் செல்லத் தயாராகிவிட்டாரா என்று அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அப்போது அவர் பிரா அணிந்துகொண்டிருந்தார். ‘இந்நேரம் நிறைய பக்தர்கள் வந்திருப்பாங்க. சீக்கிரம் கிளம்புங்க’ என்றாள். மூட்டுவலி அதிகரித்துள்ளதாகக் கணவர் கூறினார் . . . ‘தினமும் செல்வதைத்தான் புதன், சனி, ஞாயிறு என்று குறைத்தாகிவிட்டதே . . .’ என்று அவள் கூறினாள்.
அவள் மீண்டும் எட்டிப்பார்த்தாள். கணவர் உதட்டிற்கு