முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தமபாளையத்தில் இருந்து பேரா. அப்துல்சமது என்னைத் தொடர்புகொண்டபோது ஒரு நல்ல செய்தி அவரிடமிருந்து கிடைக்கும் என்பது தெரியாது. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக அவர் அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதன் பயனாகக் கழகத்தின் நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமானிடம் வலியுறுத்தி நவீனத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாமிய வாழ்வியலைப் பதிவுசெய்து வரும் படைப்பாளிகளைக் கழக மாநாட்டிற்கு அழைப்பது என முடிவெடுத்திருந்தார். எங்களின் பல்லாண்டு கால ஏக்கம் அது. ‘இனி இதைப் பேசாமல் தீராது’ என்பது அவர் வாதம்.
இதையடுத்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் குற்றாலம் செய்யது ரெஸிடன்ஸியல் பள்ளியில் பயிலரங்கம் தொடங்கியது. அதன் தொடக்க உரையைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் தலைவர் ச. தமிழ்ச் செல்வன் நிகழ்த்தினார். பின்னர் அடுத்தடுத்த அமர்வுகளில் பிரபஞ்சன், எஸ். ராமகிருஷ்ணன், பாரதி கிருஷ்ண குமார் ஆகியோரும் பங்கேற்றுச் சிறப்பித்தனர். நாளதுவரை நாயகக் காப்பியங்களையும் இஸ்லாமியப் பழந்தமிழ் இலக்கியங்களையும் மட்