சிதைந்துபோன தேசத்தின் கவிஞன்
ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சண்முகம் சிவலிங்கம் கடந்த 20. 04. 2012 அன்று மறைந்தார். 1939இல் கிழக்கிலங்கையில் பிறந்த சண்முகம் சிவலிங்கம் 1960 முதல் கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவந்தார். ஆங்கிலம் வழி பிறமொழிக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். 1988இல் இவரது முதலாம் கவிதைத் தொகுதி ‘நீர் வளையங்கள்’ தமிழியல் வெளியீடாக வெளிவந்துள்ளது. எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா தொகுத்து (1984 க்ரியா, 2003 காலச்சுவடு பதிப்பகம்) வெளியிட்ட பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பில் இவரும் இடம்பெற்றார். 2010இல் காலச்சுவடு-தமிழியல் வெளியீடாக வந்துள்ள சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்னும் இவரது கவிதைத் தொகுப்பு பரவலான வாசகக் கவனம் பெற்றது. தற்காலத் தமிழின் தனித்துவமான, வித்தியாசமான, கவிஞரான சண்முகம