தமிழில் மூன்றாம் எழுத்தியக்கம்
அனைவருக்கும் மாலை வணக்கம். காலச்சுவடு பிரசுரித்துள்ள இஸ்லாமியர்களின் படைப்பு நூல்கள் தொடர்பான என்னுடைய சிந்தனைகளை இன்று மாலை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என நண்பர் மீரான் மைதீன் கேட்டுக்கொண்டார். இந்த வாய்ப்புக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய என்னுடைய உரை ஒரு பதிப்பாளர் - ஆசிரியரின் பார்வையில் அமைகிறது. இது இலக்கிய விமர்சனம் அல்ல.
காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்ட ஆண்டு 1994. பதிப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1995. அக் காலகட்டம் முதல் இன்றுவரை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தொடர்ந்து கவனப்படுத்திப் பதிவுசெய்துவந்திருக்கிறோம். கட்டுரைகள், தலையங்கம், பதிவுகள், படைப்புகள், கண்காட்சி, பொதுக் கூட்டம் எனப் பல தளங்களிலும் இந்த அக்கறை வெளிப்பட்டுவந்திருக்கிறது. இவற்றைத் தொகுத்து 2008இல் ‘காலச்சுவடு பதிவுகளில் இஸ்லாம்’ என்னும் சுமார் 750 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டிருக்கிறோம். கோவை குண்டு வெடிப்பு மற்றும் காஷ்மீர் பிரச்சினை பற்றிக் காலச்சுவடு பிரசுரித்த மனித உரிமையாளர்களின் அறிக்கைகள் பல விவாதங்களைத் தூண்டியவை. குஜராத்