கடிதங்கள்
ஜின்னா - காந்தி, இரு தேசப் பிதாக்கள் எனும் கண்ணனின் மொழிபெயர்ப்புக் கட்டுரை அருமை. இவ்வளவு நுணுக்கமாக இவர்கள் இருவரும் இதுவரை அலசப்பட்டதில்லை. ‘இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தை முன்னின்று நடத்தியவர், விசுவாசங்களையும் வழிபாட்டுணர்வையும் வேண்டிய ஒரு லட்சியவாதி அல்ல’ என்ற காந்தியைப் பற்றிய வரி அட்சர லட்சம் பெறும்.
காந்தி சமயங்களில் பிரச்சனைகளைத் தவிர்த்ததற்கும், தான் விரும்பியது நடக்காத போது உண்ணாவிரதம் இருந்ததற்கும் அல்லது பிரிவினைக் காலகட்டத்தைப் போல, அவர் விலகிக் கொண்டதற்கும் பல காரணங்கள் இருந்திருக்கலாம். பிரச்சனைகளின் உக்கிரத்தை குறைப்பதற்கோ அல்லது மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கோ, காந்தி தன் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டிருக்கலாம்.
ஜின்னா ‘நேரடி நடவடிக்கை’யை போதிய கட்டுப்பாடின்றி ஏவிவிட்டதும், பிரிவினையின் இறுதியில் ஏற்பட்ட பெரும் ரத்தக் களறிக்கு அவர்தான் காரணம் என்பதும் பெரும் சோகம். காந்தியின் கூட்டுத் தலைமை, வேறுபட்ட சிந்தனைகளை அகப்படுத்துதல் போன்ற ஆகச் சிறந்த லட்சியங்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்தியர்களுக்கு வழ