ஆலவாய் அண்ணல்
12.08.1928ஆம் ஆண்டு சிவகங்கை மாவட்டம் நெற்குப்பையில் பிறந்து வளர்ந்த இராம. பெரியகருப்பன், தமிழ் கற்று வெறும் தமிழாசிரியராக ஊதியத்திற்காய் வேலை பார்க்காமல், தன் வாழ்நாள் முழுமையும் தமிழ்த் திறனாளியாக, தமிழ்க் காப்பு அரணாக, தமிழ் இயக்கமாக வாழ்ந்து, தமிழண்ணலாக 29.12.2015இல் புகழுடல் எய்திய பான்மை தமிழுக்கு அவர் நாளெல்லாம் உழைத்த பாங்கை நவிலும்.
மேலைநாட்டுத் திறனாய்வுக் கல்வி இந்தியப் பல்கலைக்கழகங்களில் பரவலாகும் நிலையில் இலக்கியக் கோட்பாட்டுக் கல்வி தமிழுக்குப் புதிதன்று என்றும், தொன்மைக் காலத்திருந்தே தமிழ்க் கல்வி, இலக்கிய இலக்கண கோட்பாட்டுப் பின்புலத்தில் திறனாய்வுப் பார்வையோடு வளர்ந்து ஆழ வேரூன்றி நிலைபெற்றிருந்தது எனவும் நிறுவியவர்.
தொல்காப்பியர் வெறும் இலக்கண ஆசிரியர் மட்டுமன்று, இலக்கியக் கோட்பாட்டாளரும் ஆவார் எனக் கூறி, உள்ளுறை, இறைச்சி, நோக்கு,