பெண் சிசுக்கொலை: பண்டைய மரபா? இன்றைய வீழ்ச்சியா?
சில மாதங்களுக்கு முன் தமிழ் இந்துவில் பெண் சிசுக் கொலை குறித்து தொடர் கட்டுரைகள் வெளிவந்தன. நாம் அறிந்த, ஆனால் ஏற்றுக்கொள்ள மறுக்கும், நமக்கு அருகிலேயே நடக்கும் கொடிய பெண் ஒழிப்பு குறித்த அதிர்ச்சியை அவை அளித்திருக்கும் என்று நினைக்கிறேன். தமிழகத்தின் சில பகுதிகளில் பெண் சிசுக் கொலைகள், கருக் கொலைகள் எவ்வாறு நடக்கின்றன, ஏன் நடக்கின்றன, அந்த மக்களிடையில் வேறு வழியில்லை என்று ஏன் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன என்பவையெல்லாம் தொடரில் விளக்கப்பட்டுள்ளன. இன்று தமிழ்நாடு முழுவதும் பல உசிலம்பட்டிகள் தோன்றியிருக்கின்றன; சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு என்று தமிழ்நாட்டின் மாவட்டங்கள் வரிசையாக அணிவகுக்கின்றன என்பதையும் உசிலம்பட்டியை மையமாகக் கொண்ட கட்டுரைகள் சுட்டுகின்றன. ஆனால், பெண் சிசுக் கொலையின் மூலம், பின்புலம், வரலாறு குறித்த கேள்விகள் எழுப்பப்படவில்லை. இக் கட்