இடதுசாரிகளும் இயற்கைப் பாதுகாப்பும்
இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு கூடங்குளம் அணுஉலைப் பூங்கா திட்டத்தைக் கைவிடுமாறும், கூடங்குளம் திட்டம்பற்றி எழுந்திருக்கும் விமர்சனங்கள் குறித்து உரிய விளக்கத்தை அளிக்குமாறும் தீர்மானம் இயற்றியிருக்கிறது. இது போன்ற தீர்மானம் ஒன்றை இதே மாநிலக்குழு ஒரு சில மாதங்களுக்கு முன்பும் நிறைவேற்றியது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல, அரசியல் நடவடிக்கைகளால் பின்தொடரப்படாத வெறும் தீர்மானங்களால் மட்டுமே எந்தவிதமான விளைவுகளும் ஏற்பட்டுவிடாது. சக்தியற்ற மக்களின் சகாக்களாக இருக்கவேண்டிய பெரிய இடதுசாரிக் கட்சிகள் பிற சுயநலவாத, பிழைப்புவாத, சந்தர்ப்பவாதக் கட்சிகள் போலவே இயங்குவது உண்மையிலேயே வேதனையளிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) எனும