இதழியல் வரலாற்று எழுதியலின் சவால்கள்
2015 நவம்பர் மாத காலச்சுவடில் வெளியான ஸ்வப்பநேஸ்வரி நடத்திய ‘தமிழ்மாது’ எனும் கட்டுரை ஸ்வப்பநேஸ்வரி அம்மாள் குறித்த சில அடிப்படைத் தகவல்களைத் தருகிறது, அந்த வகையில் ஸ்வப்பநேஸ்வரி அம்மாள் குறித்தும் அவர் நடத்திய தமிழ்மாது இதழ் குறித்துமான ஆய்வில் இது ஒரு தொடக்கம். அவர் நடத்திய தமிழ்மாது இதழின் மூன்று வருடத் தொகுப்புகள் கிடைத்தும் அதன் ஆசிரியரைப் பற்றிய தகவல்களை முழுமையாகப் பெறமுடியாமல்போனது இதழியல் வரலாறு எழுதுவதில் உள்ள சவால்களைக் காட்டுகிறது. இதழ் தொடங்கிய வருடம் இதுவரை 1907 என்று தவறாகக் குறிக்கப்பட்டு வந்ததை 1905 என்று சரிசெய்த அக்கட்டுரையில், அவரது சாதி குறித்த கேள்வியில் அவர் தலித் சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம் என்ற அனுமானத்தையே முன்வைக்கிறது. மேலும் அவ்விதழின் வெளியீட்டாளர், அச்சகர், உரிமையாளர் ஆகியோர் குறித்த தகவல்கள், சமூகப் பின்னனி குற