தீண்டாமையும் வறுமையும்
பேராசிரியர் கே.ஏ. குணசேகரன், ‘வடு’ என்ற தலைப்பில் எழுதியுள்ள இச்சுயசரிதை நூலில் தன் கல்லூரிப் பருவம் வரையிலான அனுபவங்களைக் கூறியிருக்கிறார். 125 பக்கங்கள் கொண்ட இந்நூலைத் தன் பேச்சுத் தமிழிலேயே எழுதியிருக்கிறார் அவர். தலித் சுயசரிதை என்ற அளவில் இது தமிழில் எழுதப்பட்டுள்ள இரண்டாவது நூலென்றும் இதற்கு முன்னதாக 1939இல் இரட்டைமலை சீனிவாசனின் ‘ஜீவிய சரித்திர சுருக்கம்’ மட்டுமே வெளிவந்துள்ளது என்றும் பல நுட்பமான சிந்தனைகளும் புதிய செய்திகளும் அடங்கிய தன் முன்னுரையில் குறிப்பிடுகிறார் ரவிக்குமார்.
கே. ஏ. குணசேகரன் பிறந்தது 1955இல். அப்படியென்றால் இந்நூல் உத்தேசமாக 1960இலிருந்து 1975வரை
யிலுமான அவரது வாழ்க்கையைப் பதிவுசெய்திருக்கிறது என்று கொள்வதில் தவறில்லை. இது வெகு சமீபத்திய காலம்தான். இந்தக் காலத்தில்கூட தலித்துகளின் வாழ்க்கை மிகக்