வல்லிசையின் எளிய பறவை
கடந்த 15.01.2016 வெள்ளியன்று பாண்டிச்சேரியில் நடந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியபோது ‘எங்காண்டே என்னால காரியம் ஆகணும்னா சார் என்பார்’ என்னும் கவிதையின் ஒரு பகுதியைச் குறிப்பிட்ட போது என் கண்களில் நீர் துளிர்த்துவிட்டது. அன்று இரவு நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தபோது பின்னிரவு வரை அவரைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம்.. மறுநாள் பாண்டிச்சேரியிலிருந்து மாலதி மைத்ரியுடன் காரில் பயணிக்கும்போது மீண்டும் அவரைப்பற்றிய பேச்சு. அன்று இரவு நண்பர்களுடன் உணவருந்தியபடி பின்னிரவுவரை நீண்ட எங்கள் பேச்சில் மீண்டும் அவரது அதே கவிதையைப் பற்றியும் அவரது வாழ்க்கை பற்றியும்.
விடிந்ததும் மாலதி மைத்ரி முகநூல் வழியாகச் செய்திஅறிந்து என்னிடம் சொன்னார். திகைப்போடும் அதிர்ச்சியோடும். உதட்டுக்குக் கொண்டுபோன தேநீர்க்கோப்பை மின்னல் தாக்குதலைப்போல தளும்பிச்