இந்தப் பத்திக்கென எழுதிக்கொண்டிருந்த நூல் அறிமுகக் கட்டுரையை நிறுத்தி வைத்துவிட்டு மீண்டும் தனிநபர் மனநலத்திற்கும் சமூகத்திற்குமுள்ள தொடர்புபற்றிச் சிந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணம் - தற்கொலை - கொலை நிகழ்வு குறித்து எழுந்த விவாதங்களின் இழையே அந்த மாற்றத்திற்குக் காரணம். பல்கலைக்கழகத்தில் வேரூன்றியிருக்கும் சாதியமும் இந்துத்துவமும் இணைந்துசெயல்பட்டு தலித் மாணவர்கள்மீது ஆதிக்கத்தைச் செலுத்தியதாலும் பல்கலைக்கழக நிர்வாகம் ஆதிக்க அமைப்புகளுக்குத் துணைபோனதாலும் ஏற்பட்ட இந்த இழப்பு, சமூக வலைத்தள விவாதங்கள் பலவற்றில் ரோஹித் வெமுலாவின் தனிப்பட்ட சோர்வு மனநிலை மற்றும் மன அழுத்தம் காரணமாக ஏற்பட்ட ஒன்றாகச் சித்திரிக்கப்பட்டது.
ரோஹித் வெமுலா தன்னை மாய்த்துக்கொள்ளும் முன் எழுதி விட்டுச்சென்ற கட