தாரை தப்பட்டை: காட்சிகளின் வன்முறை
'சேது’ (1999)வைத் தவிர இயக்குநர் பாலாவின் எந்தப் படத்தையும் தனிப்படமாக எடுத்துக் கொண்டு அந்தக் குறிப்பிட்ட படத்தைப் பற்றி மட்டுமே பேசுவது சற்றுச் சிரமமானது.
அவரது சமீபத்திய படமான ‘தாரை தப்பட்டை’யும் பார்வையாளனுக்கு நேரும் இந்த இக்கட்டிலிருந்து விடுபட்டதல்ல. புதிய படத்தைப் பார்க்கும்போது அவரது முந்தைய படங்கள் நினைவுக்கு வந்துவிடுகின்றன. முந்தைய படங்களின் சாயல் புதிய படத்தை ரசிக்கவிடாத வகையில் நிழலாடுகின்றன. கதை அமைப்பு, காட்சி நகர்வு, கதாபாத்திரச் சித்திரிப்பு உட்படப் பல அம்சங்களிலும் பழைய ஏதேனும் படத்தை நினைவுறுத்துகின்றன. ‘தாரை தப்பட்டை’யிலும் இந்த சங்கடத்தைப் பார்வையாளன் உணர்கிறான்.
இதன் பின்னணியில் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. பாலாவின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானதுமே சகல ஊடகங்களிலும் பார்வையாளனை உசுப்ப