உன் கழுத்தைச் சுற்றிக்கொண்டிருப்பது
அமெரிக்காவில் இருக்கும் எல்லோரிடமும் காரும் துப்பாக்கியும் இருக்கும் என்று நீ நினைத்துக்கொண்டிருந்தாய். உன் மாமாக்களும் அத்தைகளும்கூட அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உனக்கு அமெரிக்கன் விஸா கிடைத்தவுடனேயே அவர்கள் சொன்னது இதுதான்: இன்னும் ஒரே மாதத்தில் ஒரு பெரிய கார் வாங்கிவிடுவாய். அப்புறம் பெரிசாக ஒரு வீடு. ஆனால் அந்த அமெரிக்கர்களைப்போல் நீயும் துப்பாக்கி வாங்கிக்கொள்ளாதே.
உன் அம்மா, அப்பா, மூன்று உடன்பிறந்தாரோடு லாகோஸ் நகரில் நீ வசித்துவந்த அறைக்குள் அவர்கள் திமுதிமுவென்று நுழைந்தார்கள். அந்த அறையில் போதிய அளவுக்கு நாற்காலிகள் இல்லாததால்,
வெள்ளையடிக்காத சுவரின்மீது சாய்ந்துகொண்டு உரத்த குரலில் உனக்கு வாழ்த்து சொன்னார்கள். பின் குரலைத் தாழ்த்தி, அவர்களுக்கு நீ என்னென்ன வாங்கி அனுப்ப வேண்டுமென்று கிசுகிசுத்தார்கள். பெரிய கார