தமிழகத்தில் காடுகளிலும் மலைகளிலும் 36 வகையான பழங்குடிகள் வாழ்ந்து வருகின்றனர். மேற்குத்தொடர்ச்சி மலையின் காலடியிலிருக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில், காணிப் பழங்குடியினத்தவர், 48 குடியிருப்புகளில் வசித்துவருகிறார்கள்.
ஒவ்வொரு சமூகமும் தனக்கென குறிப்பிட்ட பாரம்பரியப் பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் கொண்டு விளங்குகின்றன. இப்பழங்குடியினரின் கலாச்சார இருப்பிடமாக நிகழ்த்துக்கலைகள் விளங்குவதுடன் அவர்களுடைய மனநிலை, கலைநயம், எளிமை, சமூக நிலை, பழக்கவழக்கம், நம்பிக்கை முதலியவற்றை வெளிக்காட்டும் கண்ணாடியாகவும் அவை திகழ்கின்றன. இவர்களிடம் வழக்கிலுள்ள வழக்கொழிந்துபோன நிகழ்த்துக் கலைகளின் தொடர்பியல் பார்வை இது.
பிறப்பு முதல் இறப்புவரை நிகழும் வாழ்க்கை வட்டச் சடங்குகள், சாற்றுப்பாடல்கள், தோற்றப்பாடல்கள், மழைச்சடங்குப் பாடல்கள், துள்ளல் பாடல்கள், கொட