புதையுண்ட பிழம்பு
எழுபதுகளின் கடைசியில், மாணவப்பருவத்தில், அமெரிக்கன் கல்லூரி நூலகத்தில், கி. ராஜநாராயணனின் ‘கிடை’ உள்ளிட்ட ஆறுபடைப்புகள் கொண்ட, வாசகர் வட்டம் வெளியீடான ‘அறுசுவை’ என்ற தொகுப்பு அகப்பட்டது. அதில் இருந்த ‘அமரபண்டிதர்’ மூலமாக சார்வாகனின் எழுத்துடன் பரிச்சயம் உண்டாயிற்று. அந்த ஒரே கதையின் வழி, அவர்மீது நிரந்தர அபிமானம் ஏற்பட்டுவிட்டது.
அந்தக் குறுநாவல், இப்போது படிக்கும்போதும் கொஞ்சமும் பழசாகாமல் இருப்பது சார்வாகனுடைய கலை நேர்த்திக்குச் சான்று. அவருடைய கதைகள் அனைத்திலுமே இந்த சமகாலத்தன்மை இருக்கிறது. பின்னர் பல வருடங்கள் கழித்துச் சிறுகதைகள் எழுத ஆரம்பித்தபோது, மாற்று வடிவத்துக்கான உதாரணமாக அமைந்தது, நகுலன் தொகுத்த ‘குருக்ஷேத்திரம்’ தொகுப்பில் இருந்த ‘உத்தரீயம்’. கதையென்று ஏதுமில்லாமல் நினைவோட்டத்தின் பாய