அக்டோபர் புரட்சி:நாம் எவ்வாறு எதிர்கொண்டோம்?
ஜவகர்லால் நேரு சென்ற நூற்றாண்டின் ஐம்பதுகளில் தி போர்மெண்ட் என்ற பத்திரிகையாளரிடம் பேட்டி கொடுக்கும்போது சொன்னார்: “எங்களுக்கு (புரட்சி நடந்த காலகட்டத்தில்) அக்டோபர் புரட்சிபற்றி அதிக விவரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் மார்க்சிய சோஷலிசத்தின் தாக்கத்தால் அது எழுந்தது என்றும் லெனினின் தலைமையில் அது நடந்தது என்றும் தெரியும். மார்க்சிசம் என்றால் என்னவென்று தெரியாது; ஆனால் எங்கள் ஆதரவு லெனினுக்கும் (அவரோடு போராடிய) மற்றவர்களுக்கும்தான்.”
ரஷ்யப் புரட்சி யுகப் புரட்சிதான் என்பதில் ஏகாதிபத்தியவாதிகளுக்கே அந்தச் சமயத்தில் ஐயம் இல்லை. அவர்களை அதன் எளிதான வெற்றி குலை நடுங்கவைத்தது. உலகையே அது மாற்றிப் போட்டுவிடக்கூடும் என்று அஞ்ச வைத்தது. 1918இல் வந்த மாண்டேகு செம்ஸ்போர்ட் அறிக்கை கூறியது; “ரஷ்யாவில் நடந்த புரட்சி சர்வாதிகாரத்தின் மீதான வெற்றி என்