வாக்குமூலங்கள்
வல்வை ந. அனந்தராஜ், யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர். இப்போது வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சில் பணிப்பாளராக இருக்கிறார். யாழ்ப்பாணத்தில் கல்லூரி அதிபராகப் பல பள்ளிக்கூடங்களிலும், கல்வி அதிகாரியாகவும் பணியாற்றியவர். கல்வித்துறைச் செயற்பாட்டாளர். ‘வல்வைப் படுகொலை /
India’s Mai Lai: Massacre at Valvettithurai’ நூலை எழுதியவர், அதற்கு முன்பாகவே இலங்கைப் படையினர் வல்வையில் நடத்திய ஊறணிப் படுகொலைகள் பற்றியும் ஆவணப்படுத்தியவர். இந்தியப் படையினர் யாழ்ப்பாணத்திலிருந்தபோது வல்வெட்டித்துறைப் பிரஜைகள் குழு என்னும் சிவ