வரலாற்றின் புனைவு
1950களில் அம்பேத்கரிய லட்சியவேகத் தோடு செயற்படவந்த தலித் செயற் பாட்டாளர் ஒருவரின் கடைசிக்கால எண்ணங்களை அண்மையில் களஆய்வொன் றின்போது தெரிந்துகொள்ள வாய்ப்பேற்பட்டது. அதுவரையிலும் தான் ஏற்றிருந்த நம்பிக்கைகளுக்குச் சமூகமும் குடும்பமும் நெருக்கடி தருவதாக மாறியபோது அவற்றோடு சமரசம் காணவேண்டி வந்ததை எண்ணி அவர் பலகாலம் புழுங்கினார். படித்துப் பெரிய ஆளாக வருவதும் சமூக மேம்பாடுதான் என்று கருதிவந்த அவரின் மகன் முழுநேரக் குடிகாரராய் மாறிப்போனதைப் பார்த்து அவனுக்குப் படிக்கக் கிடைத்த மருத்துவ சீட், அதே ஒதுக்கீட்டில் வேறொரு தலித் மாணவனுக்குக் கிடைத்திருந்தால் அந்த வேறொருவரின் குடும்பத்திற்காவது வழி பிறந்திருக்குமே என்று சொல்லிச்சொல்லிக் கடைசிவரை வருத்தப்பட்டிருக்கிறார். லட்சியவாத முனைப்போடு செயல்படும் பலருக்கும் காலமாற்றம் சார்ந்து ஏற்படும் முரண் இது. அழகிய பெரியவன் எழுதியிருக்கும் ‘வல்லிசை’ நாவலை படித்து முடிக்கும்போது அவைதான் என் நினைவுக்கு வந்தன. லட்சியவாதத்தோடு செயற்பட வந்தவர்கள் அவற்றின் எதிர்மறை விளைவுகளையும் வாழ்க்கை நடைமுறை தரும் அழுத்தங்களையும் ஒருசேரச் சந்திக்