கடிதங்கள்
அக்டோபர் தலையங்கம் நாட்டுநடப்பை வெகுத் தெளிவாக அலசியிருக்கிறது பாகுபாடின்றி. அதில் இந்தியாவின் தனித்துவமாகிய வேற்றுமையில் ஒற்றுமை என்ற பண்புடைய முகம் மாறிவருவதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.
கௌரி லங்கேஷுக்கு எதிரான வன்முறையில் ஊடகவியலுக்கு எதிரான போராட்டமும் அதன் விளைவாக இழந்த உயிரும்... நிச்சயம் அந்த ரத்தம் நியாயம் கேட்டுப் போராடுவது எங்கள் மனத்தினில் ஓலமிடுகிறது.
எந்த விமர்சனத்தையும் எதிர்கொண்டு தன் நிலை உணர்ந்து மாற்றிக்கொள்வது நல்லாட்சி நிகழ ஊன்று கோலாய் அமையும் என்ற அடிப்படை உண்மையறியாத அரசியல் இன்று நிகழ்வதை ‘அறிவால் சூழ்ந்தது மரணம்’ தலையங்கம் சுட்டிக்காட்டுகிறது.
- ஆர் ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்
‘அறிவால் சூழ்ந்தது மரணம்’. இந்தியாவில் தொடர்ந்து மரணச் செய்திகள், இது நாடா சுடுகாடா? பதில் இல்லை. அனிதாவின் மரணமே இன்னும் மாறாத ரணமாக இருக்கிறது. இந்நிலையில் கௌரியின் கொலை இந்தியாவையே உலுக்கினாலும் ‘பா.ஜ.க.’ மௌனம் காட்டுகிறது. கருத்தைக் கருத்தால் தானே எதிர்கொள்ள வேண்டும்? பேனாவில்