பாலினம் -பாலீர்ப்பு -அரசியல்
தமிழ்நாட்டில் 1986இல் முதன்முதலாக எச்ஐவி / பாலியல் நோய்த் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது; தொடர்ந்து 1993இல் எயிட்ஸ்க்கு எதிரான திட்டங்களும் தொடங்கப்பட்டன. அரசுத் திட்டத்தின்கீழ் அப்போது எச்ஐவியால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளவர் களாக லாரி ஓட்டுநர்களும் பாலியல் தொழிலாளர்களும் ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்களும் (MSM- Men who have sex with men) அடையாளப்படுத்தப்பட்டார்கள். அரசின் அந்த எச்ஐவி / எயிட்ஸ்க்கு எதிரான திட்டத்தைச் செயல்படுத்த ஏற்கெனவே இருந்த என்ஜிஓக்களும் இந்தத் திட்டத்திற்காகவே உருவாக்கப்பட்ட என்ஜிஓக்களுமே வேலை செய்யத் தொடங்கினார்கள். அவர்களுக்குப் பாலியல் தொழிலாளர்களையும் லாரி டிரைவர்களையும் அணுகுவது ஒப்பீட்டளவில் எளிதானதாகவும் பொதுச் சமூகத்திடம் தங்கள் அடையாளத்தை மறைத்து வாழும் மக்களான ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்களைக் கண்டறிவது மிகக் கடினமானதாகவும் இருந்தது. எனவே அவர்கள் திருநங்கைகளைக் கண்டறிந்து அவர்கள் மூலமாக ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தனர்.
திருநங்கைகளை இந்தத் திட்டத்தில் பணியாளர்களாகச் சேர்க்கவும் பணம் பெறவும் ஆண்களுடன் உறவுகொள்ளும் ஆண்களா