நீலப் பூச் சட்டை
விதுரன் போய்விட்டான். நான் கதவை மூடியதன் பிறகும் நான்கைந்து நிமிடங்கள் கழித்தே அவனது காரை இயக்கும் சத்தம் கேட்டது. இயங்க ஆரம்பித்த பிறகும் மேலும் ஓரிரு நிமிடங்கள் கழித்தே அது நகர்ந்தது. எனக்குக் கேட்ட விதத்தில் அவன் வாயிற்கதவை மூடவில்லை. நான் கோப்பி ஒன்றைத் தயாரித்துக் குடித்துவிட்டு விறாந்தையில் கொஞ்சம் நடந்தேன். சாப்பாட்டு மேசையைத் துப்புரவாக்கிவிட்டுப் பீங்கான் தட்டுகளைக் கழுவினேன்.
இப்போது நேரம் விடிகாலை ஒன்று இருபது. எனக்கு தூக்க மயக்கம் இல்லை. புதிதாக வாங்கிய நீலப் பூச் சட்டை கட்டில்மீது சுருண்டு கிடக்கிறது. இதோ நான் எழுதுகிறேன். நீண்ட காலத்திற்குப் பிறகு எழுதுகிறேன். எழுதுமளவிற்கான தேவையையும் விடுதலையையும் இப்போது உணர்கிறேன்.
நான் அந்தச் சட்டையை வாங்குவதற்கென்றே நேற்று அரை நாள் விடுமுறை எடுத்தேன். இதற்காக பொரளையிலிருக்கும் எத்தனை துணிக்கடைகளுக்கு