பாம்பிரி எனும் திண்ணையில்...
தக்கலை ஹலீமா எனும் புனைபெயர் கொண்ட ஹைதர் அலி, தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா அசோசியேஷன் அமைப்பின் தலைவர். ஹெச்.ஜி. ரசூலின் பால்யகாலத் தோழர். ஹெச்.ஜி. ரசூலுக்கும் தக்கலை ஜமாஅத்திற்கும் இடையில் நேர்ந்த பிரச்சினைகள் குறித்தும் அவை தீர்வானவிதம் குறித்தும் 17 ஆகஸ்ட் 2017 அன்று தக்கலை ஹலீமாவின் வீட்டில் பதிவுசெய்யப்பட்ட நேர்காணல்.
கவிஞர் ரசூலுடனான நட்பு குறித்துக் கூறுங்களேன்?
எனக்கும் ரசூலுக்கும் ஐந்து வயது வித்தி யாசம். ரசூல் நான்கு வயது குழந்தையாக இருக்கும்போதே தெரியும். ரசூலின் வீட்டிற்கு எதிர் வீட்டில்தான் என் மாமா குடியிருந்தார். மாமாவிற்குக் குழந்தைகள் இல்லாததால் என் பால்யம் அவ்வீட்டில் கழிந்தது. ரசூலின் வீடு விசாலமான முற்றத்தைக் கொண்ட அமைப்புடையது. ரசூல், அவரது அக்கா, நான் மூவரும் சேர்ந்து பாம்பிரி என அழைக்கப்படும் திண்ணை போன்ற அமைப்ப