இசையில் விரியும் நிலம்!
விதானத்துச் சித்திரம்
(கவிதைகள்)
ரவிசுப்பிரமணியன்
வெளியீடு:
போதிவனம் பதிப்பகம்,
அகமது வணிக வளாகம்,
தரைத்தளம்,
இராயப்பேட்டை நெடுஞ்சாலை
இராயப்பேட்டை & 600 014
போன்: 99400 45557
ரூ.100
உணர்வின் சொல் வடிவம்தான் கவிதை என்றால், அந்த உணர்வில் கரைவதுவே கவிதை வாசிப்பு. ‘கரைவதும் அனுபவமாவதும் தவிர வேறென்ன இருக்கிறது கவிதையில்’ என்ற லா.ச.ரா வின் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை. உணர்வுதான் கவிதை என்றால் பிரவாகித்தல், தணிதல் என்ற இரு பண்புகள் கவிதைக்கு எப்போதும் உள்ளன. மேற்கின் மரபு அதைக் கிளாசிஸம் என்றும் ரொமாண்டிசம் என்றும் பகுக்கிறது. நம் மரபிலும் இந்த இரண்டு பண்புகளும் இருக்கின்றன. சங்க இலக்கியங்கள் கட்டுப்படுத்தப்பட்ட உணர்வுகளால் ஆன செவ்வியல் என்ற