வாழ்வின் தடங்கள்
மதுரைப் புத்தகக் காட்சியையொட்டி காலச்சுவடு பதிப்பகம் ஐந்து நூல்களை வெளியிட்டது. அந்த நூல்களில் ரீனா ஷாலினி மொழிபெயர்த்த எம்.டி. வாசுதேவன் நாயரின் ‘மஞ்சு’ நாவலைத் தவிர மற்ற நான்கு நூல்களும் அபுனைவு நூல்கள். தலித் சிந்தனையாளர் சித்தலிங்கையாவின் தன் வரலாற்று நூலான ‘வாழ்வின் தடங்கள்’ இரு ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடு பதிப்பாக வெளிவந்த ‘ஊரும் சேரியும்’ என்ற தன் வரலாற்று நூலின் தொடர்ச்சி ஆகும்.
தமிழ்ப் பதிப்புத் துறை முன்னோடிகளுள் ஒருவரான சி.வை. தாமோதரம் பிள்ளையின் பதிப்புரைகள், ‘தாமோதரம்’ என்னும் பெயரில் ப. சரவணனால் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டது. பா. வெங்கடேசன் இசை ஆகியோரின் கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிடப்பட்டன.
விழாவின் தொடக்கமாக கவிஞர் செந்தி வரவேற்புரை நிகழ்த்தினார். சித்தலிங்கையா சிறப்புரையாற்