காலையின் சிறுவர்கள்
Coutersy: Colours of Art
காலையின் சிறுவர்கள்
அந்தச் சோம்பலையும் மீறி நான் பள்ளி எழுந்துவிட்டேன்,
சூரியன் உதிக்கிறது என் மேனியைத் தீண்டுகிறது
அல்லது
அது என் மேனியைத் தீண்டும் மட்டும்
தன்னை முறிக்காமல் காத்திருக்கிறது
அவ் உடற் சோம்பல்.
காலையை ஒரு தவிட்டுக் குருவியில் தேடிச் செல்கிறேன்.
வழியில் வழமைபோல் ஒரு அறிமுகமில்லாத மாடியில்
இரண்டு அறிமுகமில்லாத இளம் சிறுவர்கள்
என்னை அழைத்துச் சிரிக்கின்றனர்
யார் அவர்களுக்கு நான்?
ஒன்று, கருமிளப் பன்றிக் கன்றின் பொசுபொசு
மற்றொன்று, ரெட்டைப் புதுப்பல் முளைத்த மு